இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவ தளபதி மீண்டும் அமெரிக்கா பயணம் மேற்ொள்கிறார் என்று தகவல்கள் ெளியாகி உள்ளது.
கடந்த ஜூன் மாதம், ஆசிம் முனீர், 5 நாள்கள் பயணமாக அமெரிக்கா சென்று அந்நாட்டு அதிபர் டிரம்ப்பை நேரில் சந்தித்து பேசினார்
பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி ஆசிம் முனீர், இந்த வாரம் மீண்டும் அமெரிக்கா செல்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மே மாதம் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற மோதலுக்கு பிறகு தற்போது 2-வது முறையாக, பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
இந்த வாரம், அவர் அமெரிக்கா செல்வார் எனக் கூறப்படும் நிலையில், இந்தப் பயணத்தில் அந்நாட்டின் உயர் தலைவர்களைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக கடந்த ஜூன் மாதம், ஆசிம் முனீர், 5 நாள்கள் பயணமாக அமெரிக்கா சென்று அந்நாட்டு அதிபர் டிரம்ப்பை நேரில் சந்தித்து பேசினார். அப்போது, வெள்ளை மாளிகையில் அவருக்கு அதிபர் டிரம்ப் விருந்தளித்தார்.பெரும்பாலும், ஒரு நாட்டின் தலைவருக்கு மட்டுமே வழங்கப்படும் இந்த மரியாதையானது, பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி ஆசிம் முனீருக்கு வழங்கப்பட்டது, சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தது.