ஸ்பெயின் நாட்டில் சமீபத்தில் வெடித்த அரசியல் ஊழல் மற்றும் ஒழுங்குநீதி விவகாரம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் சோஷலிச் கட்சியின் மூன்றாம் நிலை தலைவர் சான்டோஸ் செர்டன், அரசு ஒப்பந்தங்களை வழங்கும் வகையில் பணம் மற்றும் பாலியல் தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இது பிரதமர் பெட்ரோ சான்செஸ் தலைமையிலான ஆட்சி மீது கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

இக்குற்றச்சாட்டுகள் குறித்து அறிந்ததும், பிரதமர் சான்செஸ் பொதுமக்களுக்கு நேரடியாக மன்னிப்பு கோரியுள்ளார். மேலும், அவரது பதவிக்காலம் 2027 வரை தொடர இருந்தபோதிலும், எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை தேர்தலுக்காக உபயோகிக்க விரும்பி, பிரதமர் சான்செஸ் மீது அழுத்தம் கொடுத்து வருகின்றன. அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோருகின்றனர்.
பிரதமர் சான்செஸின் பதவிக்காலம் 2027 இல் முடிவடைகிறது. இந்த சம்பவத்திற்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்பதாக அவர் அறிவித்தார். இந்த சூழலில், நேற்று நடந்த கட்சி கூட்டத்தில் பேசிய பிரதமர் சான்செஸ், “கட்சி உறுப்பினர்கள் பணத்திற்காக பாலியல் செயல்களை ஏற்றுக்கொண்டால், அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள்” என்றார்.
“ஒரு பெண்ணின் உடல் விற்பனைக்கு இல்லை என்பதே எங்கள் கொள்கை. அதற்கு முரணான நடத்தையை கட்சி பொறுத்துக்கொள்ள முடியாது,” என்று அவர் கூறினார்.