ஜகார்த்தா: தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மசூதியான இந்தோனேசியாவில் உள்ள இஸ்திக்லால் மசூதியில் போப் பிரான்சிஸ் உரையாற்றினார். போப் பிரான்சிஸ் ஆசிய பசிபிக் பகுதியில் 12 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அதன்படி, தனது சுற்றுப்பயணத்தின் மூன்றாவது நாளாக இந்தோனேஷியா சென்றடைந்த அவர், தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய மசூதியான இஸ்திக்லால் மசூதியை பார்வையிட்டார்.
அங்கு போப் பிரான்சிஸை மசூதியின் இமாம் நஸ்ருதீன் உமர் வரவேற்றார். இந்தோனேசிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆறு மதங்களைச் சேர்ந்த தலைவர்களும் இருந்தனர் (பௌத்தம், இஸ்லாம், இந்து மதம், கத்தோலிக்கம், புராட்டஸ்டன்டிசம் மற்றும் கன்பூசியனிசம்).
போப் பிரான்சிஸை வரவேற்று உரையாற்றிய நஸ்ருதீன், புவி வெப்பமடைதல் மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்டவற்றை மேற்கோள் காட்டினார். இதைத் தொடர்ந்து பேசிய போப் பிரான்சிஸ், “நாம் அனைவரும் சகோதரர்கள், யாத்ரீகர்கள். கடவுள் வழியில் வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் ஒற்றுமையாக முன்னேற வேண்டும்.
மனிதகுலத்தின் எதிர்காலத்தை அச்சுறுத்தும் போர்கள் போன்ற கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ளும் பொறுப்பை நாம் ஏற்க வேண்டும். அப்போது போப் பிரான்சிசும் நஸ்ருதீனும் ஒரு பார்வையற்ற பெண் குரானில் இருந்து சில வசனங்களையும் பைபிளில் இருந்து சில வசனங்களையும் படிப்பதைக் கேட்டனர்.