வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “ஹாரியை அமெரிக்காவிலிருந்து நாடு கடத்த விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.
இளவரசர் ஹாரி மற்றும் மேகன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். இவர் தனது சுயசரிதை புத்தகம் ‘ஸ்பேர்’ மூலம், போதைப்பொருட்களை பலவிதமாக சோதித்துப் பார்த்ததாகக் கூறினார். இதனால், அமெரிக்கா வழங்கிய விசா உத்தரவிலிருந்து, அவர் போதைப்பொருள் பயன்படுத்தி இருந்தால், அமெரிக்காவிலிருந்து விசா பெற்றிருப்பது அசம்பவமாகும்.

அதன்பின், ‘தி ஹெரிடேஜ்’ என்ற தொண்டு நிறுவனம், ஹாரி தனது விசா விண்ணப்பத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை மறைத்து உள்ளாரா என்று கேள்வி எழுப்பி, அமெரிக்க அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த விவகாரத்தை முன்பே டிரம்ப் கடுமையாக விமர்சித்திருந்தார். தற்போது அதிபராக பதவி ஏற்றுள்ள அவர், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவதில் ஈடுபட்டு வருகிறார்.
இளவரசர் ஹாரி நாடு கடத்தப்படுவாரா என்ற கேள்விக்கு டிரம்ப் சமீபத்தில் ஒரு பேட்டியில், “ஹாரியை நாடு கடத்த நான் விரும்பவில்லை. அவரை தனியாக விட்டு விடலாம். மனைவியுடன் அவருக்கு நிறைய பிரச்னைகள் உள்ளன,” எனத் தெரிவித்தார்.