மணிலா: பிலிப்பைன்ஸில் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் மற்றும் துணை அதிபர் சாரா டுடெர்டே இடையே கருத்து வேறுபாடும், விரிசல்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பில் பேசிய துணை ஜனாதிபதி சாரா டுடெர்டே, “எனக்கு எதிரான சதி வெற்றியடைந்தால், அதிபர் மார்கோஸ், அவரது மனைவி மற்றும் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் ஆகியோரைக் கொல்ல கொலையாளியுடன் ஒப்பந்தம் செய்துள்ளேன்.
இது குறித்து, அரசு வெளியிட்ட அறிக்கையில், “ஜனாதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், அதை எப்போதும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். துணை ஜனாதிபதியின் இந்த அச்சுறுத்தல் தெளிவான மற்றும் குறிப்பிட்ட சொற்களில் வெளிப்படுத்தப்பட்டது. இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.