குயின்ஸ்லாந்த்: போதைப்பொருட்கள் பறிமுதல்… ஆஸ்திரேலியா நாட்டின் குயின்ஸ்லாந்து கடற்கரையில் பழுதடைந்த படகு ஒன்றில் இருந்து 2.3 டன் அளவிலான போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த விவகாரத்தில் 2 சிறுவர்கள் உட்பட 13 பேரை கைது செய்துள்ள போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு இந்திய ரூபாயில் 4,157 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.