மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என பெயர் மாற்றம் செய்ய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். கடந்த 4-ம் தேதி புளோரிடாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், “விரைவில் மாற்றத்தை அறிவிக்க உள்ளோம். மெக்சிகோ வளைகுடாவின் பெயரை அமெரிக்க வளைகுடா என மாற்ற உள்ளோம். ஏனெனில் அது எங்களுடையது. அமெரிக்கா வளைகுடா ஒரு அழகான பெயர். அது சரியானது” என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், மெக்சிகோ வளைகுடாவின் பெயரை அமெரிக்க வளைகுடா என மாற்றும் உத்தரவில் அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் கையெழுத்திட்டார். மெக்சிகோவில் நடைபெறவுள்ள கால்பந்து போட்டியை காண விமானத்தில் பயணித்த போது டிரம்ப் இந்த பெயர் மாற்றத்திற்கான உத்தரவில் கையெழுத்திட்டார். அமெரிக்க அதிபர் டிரம்ப் பிப்ரவரி 9-ம் தேதியை அமெரிக்க வளைகுடா தினமாகவும் அறிவித்துள்ளார்.
அவர் பிறப்பித்த உத்தரவில், “முன்பு மெக்சிகோ வளைகுடா என்று அழைக்கப்பட்ட பகுதி நீண்ட காலமாக வளர்ந்து வரும் நமது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வருகிறது. மெக்சிகோ அமெரிக்காவின் பிரிக்க முடியாத பகுதியாக அறிவிக்கப்பட்டதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளேன். அமெரிக்காவின் புகழ்பெற்ற வரலாற்றில் அதன் பெருமையை மீட்டெடுத்துள்ளோம்.”