கத்தோலிக்க மதத்தின் தலைவரான போப்பாண்டவர் பிரான்சிஸ் கடந்த மாதம் உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து, புதிய போப்பை தேர்வு செய்ய உலகம் முழுவதிலுமிருந்து கார்டினல்கள் வாடிகன் நகருக்கு வந்தனர். 133 கார்டினல்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள் என அறியப்பட்டது.சிஸ்டைன் தேவாலயத்தில் ரகசியமாக நடைபெற்ற கூட்டத்தில் ஆரம்பமாக கரும்புகை வெளியிடப்பட்டதால் தேர்வு நிறைவேறவில்லை என கூறப்பட்டது.
ஆனால், இரண்டாவது நாளில் வெண்புகை வெளியேறியது. இதன் மூலம் புதிய போப்பாண்டவர் தேர்ந்தெடுக்கப்பட்டதை மக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.புதிய போப்பாக ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட் தேர்வாகி, ‘லியோ XIV’ என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். அவர் முதல் முறையாக அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்த தகவல் உறுதி செய்யப்பட்ட 70 நிமிடங்களுக்குப் பிறகு செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் அவர் தோன்றி, “அமைதி உண்டாகட்டும்” என வாழ்த்து தெரிவித்தார்.69 வயதான ராபர்ட் பிரீவோஸ்ட், சிகாகோவில் பிறந்தவர். இவர் பிரெஞ்சு மற்றும் இத்தாலிய வேருடையவர். பல வருடங்கள் பெருவில் மிஷனரி பணியில் ஈடுபட்டவர்.
சிக்லாயோவில் பிஷப்பாகவும் இருந்தார்.2023-ஆம் ஆண்டு ஆயர்கள் தொடர்பான டிகாஸ்டரிக்கும், லத்தீன் அமெரிக்கா சார்ந்த போன்டிஃபிகல் கமிஷனுக்கும் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.அவர் 2023 இல் கார்டினலாகவும், 2025 இல் கார்டினல்-பிஷப்பாகவும் உயர்த்தப்பட்டார். அவரது தேர்வு உலகில் புதிய தலைமுறைக்கு ஒருவிதம் மாற்றத்தை சுட்டிக்காட்டுகிறது.அவர் செய்த முதல் உரையில், அனைவருக்கும் அமைதி வேண்டுகிறார் எனும் செய்தியை உலகிற்கு பகிர்ந்தார்.