ரஷியா: உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரஷியா ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான போர் நீண்டு கொண்டே இருக்கிறது. உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்துவம், அதற்கு உக்ரைன் டிரோன் மூலம் தாக்குதல் நடத்துவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
கடந்த வாரம் உக்ரைன் டிரோன்கள் ரஷியாவை தாக்கியது. இதனால் வான் பாதுகாப்பு சிஸ்டம் மூலம் டிரோன் தாக்குதலை முறியடித்தது. அப்போதுதான் தவறுதலாக அஜர்பைஜான் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விமான விபத்தில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த நிலையில் தொடர்ந்து உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரஷியா ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. கீவ் நகரில் ரஷியா பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இரண்டு மிகப்பெரிய வெடிச்சத்தம் கேட்டது என உக்ரைன் படைகள் தெரிவித்துள்ளது.
தலைநகர் கீவில் உள்ள டார்னிட்ஸ்கிய் மாவட்டத்தில் ஒரு ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், மற்றொரு ஏவுகணை தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மாவட்டத்தில் ஏவுகணையின் சிதைந்த பாகங்கள் விழுந்ததை உக்ரைன வீரர்கள் உறுதி செய்துள்ளனர். இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
வடகிழக்கு பிராந்தியமான சுமியில் உள்ள ஷோஸ்ட்கா நகரில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு கட்டங்கள், கல்வி வசதி பெறும் நிறுவனங்கள் சேதம் அடைந்துள்ளன என சுமி மேயர் தெரிவித்துள்ளார்.
இதைத் தவிர மற்ற பல இடங்களிலும் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களால் தாக்கப்பட்டுள்ளது என விமானப்படை தெரிவித்துள்ளது.