உக்ரைன் : உக்ரேனில் ரயில் நிலையத்தில் ரஷ்யா போன் தாக்குதல் நடத்தியதில் 30 பேர் கொடூரமாக பலி உள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உக்ரைனின் ஷோஸ்ட்கா ரயில் நிலையத்தில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், 30 பேர் பரிதாபமாக உயிரிழந்திருப்பதை அதிபர் ஜெலன்ஸ்கி தனது X தளத்தில் உறுதி செய்துள்ளார்.
மேலும், ரயில் தீப்பிடித்து எரியும் வீடியோவையும் அவர் பதிவிட்டுள்ளார். இதனை கொடூரமான தீவிரவாதச் செயல் என குற்றஞ்சாட்டிய ஜெலன்ஸ்கி, ரஷ்யாவிற்கு எதிராக உலக நாடுகள் கடும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.