
வாஷிங்டன் நகரில் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வாளர்கள் புதிய ஒரு சூப்பர் எர்த் கோளை கண்டுபிடித்துள்ளனர். இதன் காரணமாக, அந்த கோளில் உயிர்கள் இருக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதுவரை ஏலியன்கள் நேரடியாக கண்டுபிடிக்கப்படவில்லை.
ஆனாலும் இந்த புதிய சூப்பர் எர்தில் உயிரின் சாத்தியம் இருப்பதாக சிலர் கருதுகிறார்கள்.இந்த ஆய்வை ஹார்வர்ட் மற்றும் ஸ்மித் ஸோனியன் மையத்தின் விஞ்ஞானிகள் இணைந்து மேற்கொண்டனர். இந்த புதிய கோள் பூமியை விட இரட்டிப்பு அளவில் பெரியது.
மேலும், அது தனது நட்சத்திரத்தை சனிக்கோளைக் காட்டிலும் அதிக தூரத்தில் சுற்றுகிறது.பொதுவாக பூமியை விட பெரிய பாறை கோள்கள் சூப்பர் எர்த் என்று அழைக்கப்படுகின்றன. இந்த புதிய சூப்பர் எர்த் பெரும்பாலும் பாறையால் ஆனது என்றே கருதப்படுகிறது.
சில சூப்பர் எர்த்கள் வாயுக்களால் ஆனதாகவும் இருக்கலாம்.இந்த கோளில் உயிர்கள் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்றாலும், அதை 100% உறுதி செய்ய முடியாது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தொடர்ந்து ஆய்வுகள் நடந்தால் இதுபற்றி தெளிவாகும்.
சூரிய குடும்பத்தில் இத்தகைய சூப்பர் எர்த்கள் இல்லை.ஆனால் சூரிய குடும்பத்திற்கு வெளியே இவை சாதாரணமாக இருக்கின்றன. இந்தக் கோள்களை ஆய்வு செய்வதன் மூலம் பூமியை போன்ற வாழ்விடம் வேறு இடங்களில் இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள முடியும். மனிதர்களுக்கு எதிர்காலத்தில் பூமியைத் தவிர மற்ற இடங்களை தேவைப்படும் நிலை உருவாகலாம்.