அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரத்தில் சலாடோ ஆறு ரத்த நிறமாக மாறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகரின் ஒரு பகுதியில் வசிப்பிடங்கள், மற்றொரு பகுதியில் தொழிற்சாலைகள் உள்ளன.
அதிகாலை கடுமையான துர்நாற்றம் வீசியது, இதனால் மக்கள் அச்சத்துடன் விழித்துள்ளனர். ஆற்றின் நிறம் மாற்றம் பெற்றதைக் கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதிகாரிகள் இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன என்பதை ஆய்வு செய்து வருகின்றனர்.

தொழிற்சாலைகளில் இருந்து வெளியான கழிவுகளால் ஆற்றின் நிறம் மாறியிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. தொழிற்சாலை கழிவுகள் ஆற்றில் கலந்ததா அல்லது வேறு காரணமா என விஞ்ஞானிகள் மாதிரிகளை சேகரித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் சுற்றுச்சூழல் மாசுபாட்டின் தாக்கத்தை உணர்த்துகிறது. ஆற்றில் மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளை கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு விரைவில் தீர்வு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.