தெஹ்ரான்: இஸ்ரேலுடனான போர் காரணமாக ஈரானின் வான்வெளி ஜூன் 13 அன்று மூடப்பட்டது. ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் மற்றும் இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் ஈரானின் வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
மேலும், ஈரானில் விமானங்கள் முழுமையாக இயக்கப்படுகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இஸ்பஹான் மற்றும் தப்ரிஸில் உள்ள விமான நிலையங்களைத் தவிர, நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலிருந்தும் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை இயக்கப்படும் என்று ஈரானிய விமான அதிகாரிகள் தெரிவித்தனர்.

உள்கட்டமைப்பு பணிகள் முடிந்ததும் இஸ்பஹான் மற்றும் தப்ரிஸில் இருந்து விமானங்கள் மீண்டும் தொடங்கும் என்று ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது. கடந்த மாதம் ஜூன் 13 அன்று இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்திய பின்னர் ஈரான் தனது வான்வெளியை முற்றிலுமாக மூடியது.
இதன் பின்னர், ஜூன் 24 அன்று இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.