சிலி: சிலியில் வீசிய சூறைக்காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததில் 10 நாட்களுக்கு மேல் நகரங்கள் இருளில் மூழ்கின.
சிலி தலைநகர் சான்டியாகோவில் இம்மாத தொடக்கத்தில் வீசிய சூறை காற்றில் ஏராளமான மரங்கள் சாய்ந்து, மின் கம்பிகள் அறுந்ததால், கடந்த 10 நாட்களாக ஒன்றரை லட்சம் குடியிருப்புகள் இருளில் மூழ்கி உள்ளன.
வரும் காலங்களில் அவ்வாறு நடக்காமல் இருக்க, மரங்கள் ஆரோக்கியமாக உள்ளனவா என அந்நாட்டு அதிகாரிகள் செயற்கைகோள் மூலம் கண்காணிக்கத் தொடங்கி உள்ளனர்.
பச்சை நிறத்துக்கு மாறாக இலைகள் மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தில் காணப்பட்டால், மரங்கள் பட்டு போய் விட்டதாக கருதி அவற்றை வெட்டி அப்புறப்படுத்திவிட முடிவெடுத்துள்ளனர்.