கோபன்ஹேகன்: டென்மார்க் மற்றும் நார்வே விமான நிலையங்களில், சந்தேகத்துடனான ட்ரோன் பறப்பால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. டென்மார்க்கின் நோர்டிக் மாகாணத்தில் உள்ள கோபன்ஹேகன் விமான நிலையம் நேற்று முன்தினம் மாலை மூடப்பட்டது. இதேபோல், நார்வேயின் ஒஸ்லோ விமான நிலையம் அருகிலும் ட்ரோன்கள் பறப்பதை அதிகாரிகள் கண்டனர்.

இதனால் கோபன்ஹேகனுக்குச் செல்லும் 35 விமானங்கள் மாற்றப்பட்டன; ஒஸ்லோ விமான நிலையத்திலும் 50 விமானங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன. ஏராளமான விமானங்கள் தாமதமாக புறப்பட்டன, பயணிகள் பதற்றத்தை எதிர்கொண்டனர்.
சைபர் தாக்குதல்கள் சமீபத்தில் ஐரோப்பிய விமான நிலையங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், ட்ரோன்களின் பறப்பும் சந்தேகத்தை அதிகரித்துள்ளது. கோபன்ஹேகன் போலீசார், ட்ரோன்கள் ரஷ்யாவுக்கு சொந்தமானதா என உறுதி செய்ய முடியவில்லை என்று தெரிவித்தனர்.
தற்போது, டென்மார்க் மற்றும் நார்வே போலீசார் இணைந்து, ட்ரோன்களின் வகை மற்றும் பறப்பின் காரணத்தை கண்டறிவதற்கான தீவிர விசாரணையை துவக்கியுள்ளனர்.