வாடிகன்: அந்த அறிக்கையில், “புதிய போப்பை தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு மே 7-ம் தேதி தொடங்கும். தற்போது ரோமில் உள்ள கர்தினால்கள் இன்று (திங்கட்கிழமை) சந்தித்து தங்களது ஐந்தாவது பொதுக்குழுவின் போது முடிவெடுத்தனர். மாநாடு வாடிகன் சிஸ்டைன் தேவாலயத்தில் நடைபெறும். மாநாடு நடைபெறும் நாட்களில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.”

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ் கடந்த 21-ம் தேதி காலமானார். அவரது மறைவுக்கு உலகத் தலைவர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர். போப் பிரான்சிஸ் அவர்களின் இறுதி ஊர்வலம் கடந்த 26-ம் தேதி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இந்திய அதிபர் திரௌபதி முர்மு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். ஜோர்ஜ் பெர்கோக்லியோ என்ற இயற்பெயர் கொண்ட போப் பிரான்சிஸ், லத்தீன் அமெரிக்காவின் முதல் போப் ஆவார். அவர் மார்ச் 13, 2013 அன்று 266-வது போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் கத்தோலிக்க கிறிஸ்தவ மத நடைமுறைகளில் பெரிய சீர்திருத்தங்களை செய்ததற்காக அறியப்பட்டவர்.