இஸ்ரேல்: ஹமாஸ் தலைவர் யகியா சின்வார் கொல்லப்பட்டதால் காஸா போர் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கருத முடியாது என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளதால் போர் தொடரும் என்றே தெரிகிறது.
ஹமாஸ் தலைவர் யகியா சின்வார் கொல்லப்பட்டதால் காஸா போர் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கருத முடியாது என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
யகியா சின்வார் பதுங்கியிருந்த கட்டடத்தின் மீது பீரங்கித் தாக்குதல் நடத்தப்பட்டதன் வீடியோ காட்சிகளை வெளியிட்டுப் பேசிய இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி, ஹமாஸுக்கு எதிரான போர் தொடரும் என்று தெரிவித்தார்.
எந்த வகையிலாவது ஹமாஸ் பிடியில் உள்ள பிணைக் கைதிகளை நிச்சயம் மீட்போம் என்றும் அவர் தெரிவித்தார். இதற்கிடையே, யகியா சின்வார் கொல்லப்பட்டதால், காஸாவில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று நம்புவதாகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.