தென்கொரியா : பிரபல தென் கொரிய நடிகை மர்மமான முறையில் இறந்து கிடந்த வழக்கில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனால் அவர் கொலை செய்யப்படவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல தென் கொரிய நடிகை கிம் சே ரான் (24) நேற்று தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். குறுகிய காலத்தில் மிகவும் பிரபலம் அடைந்ததால், பொறாமையால் யாரோ அவரை கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில், கிம் சே ரான் தற்கொலை செய்து கொண்டது போஸ்ட் மார்ட்டம் ஆய்வில் உறுதியானதாக போலீஸ் தெரிவித்துள்ளது. நடிகை ரான் பல படங்கள், வெப் சீரிஸ்களில் நடித்து சர்வதேச புகழ்பெற்றவர்.