அமெரிக்கா: 14,000 பேரை பணிநீக்கம் செய்கிறது அமேசான் என்ற தகவல் பெரிய அளவிலான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இ-காமெர்ஸ் நிறுவனமான அமேசான் 14,000 பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. செலவின குறைப்பு நடவடிக்கையாக கடந்த நவம்பரில் 18,000 பேரை அமேசான் பணிநீக்கம் செய்தது.
இதன் தொடர்ச்சியாக கார்ப்பரேட் பதவிகளில் உள்ள 14,000 பேரை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. .
இந்த ஆட் குறைப்பால் ஆண்டுதோறும் ரூ.31,000 கோடிக்கும் மேல் சேமிக்க முடியும் என அமேசான் கருதுகிறது. இருப்பினும் அமேசான் நிறுவனத்தின் இந்த முடிவு பெரிய அளவிலான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.