ஐரோப்பா: புதிய மாடல் மின்சாரம் மற்றும் ஹைபிரிட் கார்கள் அறிமுகத்துடன் கோலாகலமாகத் பாரிஸ் கார் கண்காட்சி தொடங்கியது.
ஐரோப்பாவின் மிகப்பெரிய கார் கண்காட்சி என அழைக்கப்படும் பாரிஸ் கார் கண்காட்சி கோலாகலமாகத் தொடங்கியது.
மலிவான விலைக்கு மின்சார கார்களை ஏற்றுமதி செய்யும் சீன நிறுவனங்களுடன் போட்டிபோட முடியாமல் ஐரோப்பிய நிறுவனங்கள் திணறிவருவதால், இம்மாத இறுதிக்குள் சீன கார்களுக்கு கூடுதல் வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவெடுத்துள்ளது.
இந்நிலையில், பல புதிய மாடல் கார்கள் இந்த கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டன. டொயோட்டாவை தவிர மற்ற அனைத்து முன்னனி நிறுவனங்களும் பங்கேற்றதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.