அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியத்திற்கு கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப் போவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பில், எந்த நாட்டிற்கு இந்த வரி விதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டதில்லை.
அதிபராக பதவியேற்ற பிறகு, பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக வரி விதிக்க அவர் தொடர்ந்து அறிவிப்புகள் அளித்து வருகின்றார். “மற்ற நாடுகள் எங்களுக்குத் விதிக்கும் வரி போன்று, நாம் கொடுக்கின்றோம்,” என்று டிரம்ப் கூறியுள்ளார்.
இந்த வரி அறிவிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சீனாவும், மெக்சிகோவும், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்துள்ளன.
இதன் பின்னர், டிரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியத்திற்கு 25 சதவீதம் வரி விதிப்பதாக கூறியுள்ளார். மேலும், “இந்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்,” என அவர் குறிப்பிட்டார். அவர், அமெரிக்க பொருட்களுக்கு கூடுதலாக வரி விதித்தால், அதற்கான பதிலடி கொடுக்கப்பட்டு கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.