வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான அதிகாரப்பூர்வ ஆவணங்களில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் நேற்று கையெழுத்திட்டார். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெறவுள்ளது.இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியில் இருந்து அதிபர் பிடன் திடீரென விலகினார். இதனையடுத்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ், துணை ஜனாதிபதி பதவிக்கு ஜனநாயக கட்சியால் முன்னிறுத்தப்பட்டுள்ளார்.
அவருக்கு முன்னாள் அதிபர் ஒபாமா உட்பட பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் ஆகஸ்ட் முதல் வாரத்தில் அறிவிக்கப்படுவார். கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது. அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான அதிகாரப்பூர்வ ஆவணங்களில் கமலா ஹாரிஸ் நேற்று கையெழுத்திட்டுள்ளார்.
கமலா ஹாரிஸ் தனது எக்ஸ் தளத்தில், ‘அமெரிக்க அதிபர் பதவிக்கான எனது வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் படிவத்தில் கையெழுத்திட்டுள்ளேன். ஒவ்வொரு வாக்குகளையும் பெற கடுமையாக உழைப்பேன். நவம்பரில் நடக்கும் தேர்தலில், எங்கள் மக்கள் இயக்கம் பிரசாரம் வெற்றி பெறும்,” என்றார்.