பாரீஸ்: உலகப் புகழ்பெற்ற லூவ்ரே அருங்காட்சியகத்தில் மோனாலிசா ஓவியம் வைக்கப்பட்டுள்ள பகுதியில் நகைகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அருங்காட்சியகம் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது.

பிரான்ஸ் அமைச்சர் ரஷிதா டடி வெளியிட்ட அறிக்கையின் படி, கொள்ளை இன்று காலை நடந்தது. யாருக்கும் பாதிப்பு இல்லை, ஆனால் மதிப்பெண் அளிக்க முடியாத நகைகள் திருடப்பட்டுள்ளன. கொள்ளை சம்பவம் ஏழு நிமிடங்கள் நீடித்தது. ஸ்கூட்டர் மூலம் வந்த கொள்ளையர்கள் லிப்ட் வழியாக சென்று நகைகளை எடுத்துச் சென்று தப்பியோட்டம் செய்துள்ளனர்.
அருங்காட்சியக ஊடகங்கள் தெரிவித்ததாவது, கொள்ளையர்கள் அப்பல்லோ கேலரியில் ஜன்னல் கதவுகளை உடைத்து நெப்போலியன் காலத்து 9 நகைகளை திருடியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து மக்கள் அருங்காட்சியகத்தில் முன்கூட்டியே குவிந்திருந்தனர், பரபரப்பு நிலவியுள்ளது.