கனடா: அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள டிரம்ப் கூறிய கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க வாய்ப்பில்லை என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கனடா பிரதமராக கடந்த 9 ஆண்டுகள் பதவி வகித்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக ஜன. 6-ல் அறிவித்தார். புதிய லிபரல் கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் போது பதவியை ராஜிநாமா செய்வதாக அவர் அறிவித்திருக்கிறார்.
இந்நிலையில் டிரம்ப் கூறிய கருத்துக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க வாய்ப்பில்லை என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.