புது டெல்லி: சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி நேற்று முன்தினம் இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியா வந்தார். அப்போது அவர் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்தார். அப்போது தைவான் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
தைவான் பிரச்சினை குறித்து ஜெய்சங்கர் எந்த வலுவான கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், வான் யீ உடனான சந்திப்பின் போது, தைவானை சீனாவின் ஒரு பகுதியாகவே வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மீண்டும் உறுதிப்படுத்தியதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டதை அடுத்து இந்தியா ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளது.

“தைவான் குறித்த எங்கள் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. உலகின் பிற பகுதிகளைப் போலவே, இந்தியாவும் தைவானுடன் பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் கலாச்சார உறவுகளில் கவனம் செலுத்தும் உறவைக் கொண்டுள்ளது என்பதை வலியுறுத்தப்பட்டது.
நாங்கள் அதைத் தொடர விரும்புகிறோம்” என்று இந்திய அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.