ஜெருசலேம்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “பாலஸ்தீன நாடு இனி இருக்காது, இந்த நிலம் எங்களுக்குச் சொந்தமானது” என்று தெரிவித்ததனால் உலகம் முழுவதும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
காசாவில் பாலஸ்தீனர்கள் வசிக்கும் பகுதிகளில், இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதை நிறுத்த வேண்டும் என்று பல நாடுகள் வலியுறுத்தினாலும், அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் தனது தாக்குதலை தொடர்கிறது.

இந்த சூழலில் நெதன்யாகு, “பாலஸ்தீன நாடு இருக்காது என்ற எங்கள் வாக்குறுதியை நிறைவேற்றப் போகிறோம். எங்கள் பாரம்பரியம், நிலம் மற்றும் பாதுகாப்பை காப்போம்” எனக் கூறினார். இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி, சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ், நெதன்யாகுவின் இந்த கருத்தை கடுமையாக கண்டித்துள்ளார். இதன் மூலம், பாலஸ்தீன்-இஸ்ரேல் மோதல் மேலும் தீவிரமடையும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.