வாஷிங்டன்: பிரபலமான டைம் பத்திரிகை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தலைமுடி குறைவாகக் காணப்படும் புகைப்படத்தை அட்டைப்படமாக வெளியிட்டதற்கு டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்–எகிப்து உச்சி மாநாடு மற்றும் மத்திய கிழக்கில் கிடைத்த வெற்றிகளைப் பாராட்டி, டிரம்பின் இரண்டாவது ஆட்சிக் கால சாதனைகளைப் புகழ்ந்து அந்த பத்திரிகை கட்டுரை எழுதியது. ஆனால் அட்டைப்படத்தில், தலைமுடி மிகக் குறைவாகக் காணப்படும் அவரது புகைப்படத்தை பயன்படுத்தியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து டிரம்ப் தனது Truth Social பக்கத்தில் பதிவு செய்துள்ளார்: “டைம் பத்திரிகை என்னைப் பற்றிய கட்டுரையை நன்றாகவே எழுதியுள்ளது. ஆனால் அட்டைப்படம் மிக மோசமானது. என் தலைமுடியை அவர்கள் மறைத்து விட்டார்கள். ஏன் இப்படி செய்கிறார்கள்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
டைம் பத்திரிகையுடனான டிரம்பின் மோதல் இது முதல் முறை அல்ல. கடந்த காலத்திலும், எலான் மஸ்க் உடன் ஓவல் அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் அவரது புகைப்படத்தை வெளியிட்டதை டிரம்ப் கடுமையாக விமர்சித்திருந்தார். இப்போது தலைமுடி குறித்த சர்ச்சையால் மீண்டும் அவருக்கும் டைம் பத்திரிகைக்கும் இடையே பதட்டம் ஏற்பட்டுள்ளது.