அமெரிக்கா: தேர்தலின்போது பிரபலங்களுக்கு பணம் கொடுத்ததாக கமலா ஹாரிஸ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட கமலா ஹாரிஸ், பிரபலங்களுக்கு மறைமுகமாகப் பணம் கொடுத்ததாகக் கூறப்படுவது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், தேர்தல் பிரசாரத்தின்போது பிரபல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும், பிரபலங்களுக்கும் கமலா ஹாரிஸ் பணம் கொடுத்தது சட்டவிரோதம் என குற்றம் சாட்டியுள்ளார்.
தன்னை ஆதரித்த அமெரிக்கப் பிரபலங்கள் லெப்ரான் ஜேம்ஸ், கார்டி பி, பியான்ஸ், லேடி காகா, ஓப்ரா வின்ஃப்ரே, புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன் உள்ளிட்டோருக்கு கமலா ஹாரிஸ் பணம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.