வாஷிங்டனில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கிக்கு முக்கிய அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணையக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை அஞ்சி 2022ஆம் ஆண்டு நேட்டோ கூட்டமைப்பில் இணைய முயற்சித்தது. இதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அந்த முயற்சியே பின்னர் போரை தூண்டியது. 2022 பிப்ரவரியில் தொடங்கிய இந்தப் போர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதுவரை 13,000க்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் டிரம்பை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார். இதற்கு முன்னர் டிரம்ப் சமூக வலைதளத்தில், “உக்ரைன் அதிபர் விரும்பினால் ரஷ்யாவுடனான போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர முடியும். இல்லையெனில் அவர் தொடர்ந்து போராடலாம். ஆனால் நேட்டோவில் உக்ரைன் இணையக் கூடாது. சில விஷயங்கள் ஒருபோதும் மாறாது” என்று குறிப்பிட்டுள்ளார்.