வாஷிங்டனில் தற்போது சுற்றுலா துறையில் கடுமையான பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வரி விவகாரங்கள், வர்த்தக போர்கள், மாணவர்களுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் டாலரின் மதிப்பு குறைவு போன்ற பல காரணங்களால் இந்த துறை பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் முக்கிய சுற்றுலா நிகழ்வுகளில் ஒன்று டைம்ஸ் ஸ்கொயரில் நடைபெற்ற திருவிழா கூட இந்த ஆண்டு மந்தமாகவே அமைந்தது. அமெரிக்க தேசிய சுற்றுலா அலுவலகத்தின் தகவலின்படி, மார்ச் மாதத்தில் மட்டும் வெளிநாட்டு பயணிகளின் வருகை 11.6% குறைந்தது. குறிப்பாக சீனாவிலிருந்து மட்டும் பயணிகள் வரத்து 1% குறைவடைந்துள்ளது.
இதன் காரணமாக டெல்டா விமான நிறுவனம் சில சேவைகளை குறைத்துள்ளது. பயணிகள் குறைவால் விமானங்களின் எண்ணிக்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் லாஸ் வேகாஸின் சுற்றுலா வருமானம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. டூரிசம் எக்னாமிக் எனும் நிறுவனம் வெளியிட்ட புதிய தரவுகளின்படி, வர்த்தக வளர்ச்சி எதிர்பார்ப்புகள் குறைந்துள்ளன. வெளிநாட்டு பயணிகளின் வருகை இந்த ஆண்டில் 9.4% வரை குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, டாலரின் மதிப்பு யூரோவுக்கு எதிராக குறைந்ததால் ஐரோப்பியர்கள் அமெரிக்கா நோக்கி பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர். ஆனால் சீன அரசு தனது குடிமக்களுக்கு அமெரிக்கா பயணிக்க எச்சரிக்கை விடுத்துள்ளது. இது அமெரிக்க சுற்றுலா வர்த்தகத்தில் எதிர்பாராத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலா துறையின் மொத்த மதிப்பு $2.36 டிரில்லியன் எனப் போதப்படுகிறது. இதில் 10 முதல் 20 சதவிகித வருமானம் வெளிநாட்டு பயணிகளால் உருவாகிறது.
தற்போதைய குறைவு, சுமார் $41 பில்லியன் இழப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் மதிப்பீடு செய்கிறார்கள். இந்தத் துறை விமான சேவைகள், ஓட்டல்கள், உணவகங்கள், கைவினைத் தயாரிப்புகள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் ஆகியவற்றோடு நெருக்கமாக இணைந்திருக்கிறது. சுற்றுலா வருமானம் குறைவால் இந்த அனைத்து துறைகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. டிரம்பின் கடுமையான வரி நடவடிக்கைகள், வெளிநாட்டு வர்த்தக ஒழுங்குகள் மற்றும் பயணத்தடை போன்று அமெரிக்காவின் சுற்றுலா துறைக்கு நிழல் வீசுகின்றன. வர்த்தகத்திலும் சுற்றுலாவிலும் இவைகள் சேர்ந்து மோசமான விளைவுகளை உருவாக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.