வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப், இன்று(ஜூலை 19) நடந்த கட்சி கூட்டத்தில் பேசுகையில், கடவுள் அருளால் தான் உயிர் பிழைத்ததாகவும், அமெரிக்காவுக்காக தொடர்ந்து போராடுவேன் என்றும் கூறினார்.
சில நாட்களுக்கு முன்பு, ஒரு ஆசாமியால் சுடப்பட்டதில் டிரம்ப் காதில் லேசான காயத்துடன் தப்பினார். இதைத் தொடர்ந்து அவர் பங்கேற்ற முதல் கூட்டத்தில் பேசியதாவது:
அந்த துப்பாக்கிச் சூடு எப்போது நடந்தது என்பது எனக்கு நினைவிருக்கிறது. ஒரு குண்டு என் தலையை நோக்கி வந்து கொண்டிருந்தது. தோட்டா என்னைத் தாக்கியபோது என் காதுகளிலும் கைகளிலும் ரத்தம் கொட்டியது. நான் இறந்துவிட்டேன் என்று நினைத்தேன், அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும் நான் இறந்துவிட்டதாக நினைத்தார்கள். நான் இறந்துவிட்டால் இப்போது உங்கள் முன் நிற்க முடியாது. கடவுள் என்னுடன் இருக்கிறார். கடவுள் அருளால் உயிர் பிழைத்தேன். தலை குனிந்ததால் பெரும் ஆபத்தில் இருந்து தப்பித்தேன். நடந்த தாக்குதலை நினைக்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது. இருப்பினும், நான் இப்போது மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்.
இப்போது நடப்பது அமெரிக்க மக்களின் தேர்தல். இந்த அமெரிக்க நாட்டிற்காக நான் தொடர்ந்து போராடுவேன். என் வாழ்வில் தொடர்ந்து போராடுவேன். உலகில் அமைதியை நிலைநாட்டுவோம். ஜனநாயகத்தை பாதுகாக்க பாடுபடுகிறேன்.
தற்போது அமெரிக்காவில் அதிபர் ஜோ பிடன் தலைமையிலான அரசு கவிழ்ந்துள்ளது. பணவீக்கம் அதிகரித்துள்ளது. எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். அமெரிக்காவை ஒரே நாடாகப் பாதுகாக்கப் பாடுபடுவோம். அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுவோம் என்றார் டிரம்ப்.
பாதுகாப்பு படையினருக்கு பாராட்டுக்கள்
டிரம்ப் உரையாற்றும் போது துப்பாக்கிச்சூட்டில் துரிதமாக செயல்பட்டபாதுகாப்பு படையினருக்கு நான் பாராட்டுகிறேன். அவர்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். மேடையில் பாதுகாப்பு படையினர் போல் வடிவமைக்கப்பட்ட சிலைக்கு முத்தமிட்டு நன்றி தெரிவித்தார்.