லண்டன்: ஒரே இரவில் 300-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 4+ ஏவுகணைகள் மூலம் ரஷ்யா உக்ரைனைத் தாக்கியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்த அதிபர் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காததால் அங்கு தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
“இனி காத்திருப்பதில் அர்த்தமில்லை. போர் நிறுத்த ஒப்பந்தத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. இது குறித்து புடின் ஒரு முடிவை எடுக்க வேண்டும். மக்கள் மேலும் மேலும் இறந்து கொண்டிருக்கிறார்கள். புடினின் நடவடிக்கைகளில் நான் அதிருப்தி அடைந்துள்ளேன். இப்போது அவருடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எனக்கு ஆர்வம் இல்லை. நான் ரஷ்ய மக்களை நேசிக்கிறேன். எனவே கூடுதல் வரிகளை விதிப்பது பற்றி நான் கொஞ்சம் யோசித்து வருகிறேன்.

ரஷ்யாவுடன் நான் அப்படிச் செய்ய விரும்பவில்லை. எனவே அடுத்த 10 முதல் 12 நாட்களுக்குள் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று நான் காலக்கெடுவை வழங்குகிறேன். எனக்கு அமைதி வேண்டும். அது நடக்கவில்லை என்றால், கடுமையான வரிகளை விதிப்பதைத் தவிர வேறு வழியில்லை,” என்று டிரம்ப் கூறினார்.
ரஷ்ய ஏற்றுமதிகளை வாங்கும் நாடுகளுக்கும் கூடுதல் வரிகள் விதிக்கப்படும் என்று டிரம்ப் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் தாக்கம் உலகளவில் தீவிரமாகக் காணப்படுகிறது. முன்னதாக, கடந்த 14-ம் தேதி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அடுத்த 50 நாட்களுக்குள் உக்ரைனுடன் போர் நிறுத்தத்திற்கு விளாடிமிர் புடின் ஒப்புக் கொள்ளாவிட்டால், ரஷ்யா மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும் என்று எச்சரித்தார்.