வாஷிங்டன்: டொனால்ட் டிரம்ப் தனது தனிப்பட்ட சமூக ஊடக தளமான Truth Social இல் கூறினார்: “எல்லோரும் மத்திய கிழக்கில் பணயக்கைதிகள் மிகவும் வன்முறையாகவும், மனிதாபிமானமற்ற முறையிலும், முழு உலகத்தின் விருப்பத்திற்கு எதிராகவும் பேசுகிறார்கள். ஆனால் அதெல்லாம் வெறும் பேச்சு. எந்த நடவடிக்கையும் இல்லை. நான் பெருமையுடன் அமெரிக்க அதிபராக பதவியேற்கும் நாளான ஜனவரி 25, 2025-க்கு முன் காஸாவில் உள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்.
இல்லை என்றால், மத்திய கிழக்கு நாடுகளும், மனித குலத்திற்கு எதிராக இத்தகைய அட்டூழியங்களைச் செய்பவர்களும் மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். இதற்கு காரணமானவர்கள் மீது மிகப்பெரிய தாக்குதல் அமெரிக்க வரலாற்றில் நடத்தப்படும். பணயக்கைதிகளை உடனடியாக விடுவிக்கவும். இவ்வாறு டிரம்ப் கூறினார்.
அக்டோபர் 7, 2023 அன்று, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு இஸ்ரேலில் சுமார் 1,200 பேரைக் கொன்று குவித்தது மற்றும் 200-க்கும் மேற்பட்ட பிணைக் கைதிகளைப் பிடித்தது. இதையடுத்து, ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக ஒழிப்போம் என்று சபதம் எடுத்த இஸ்ரேல், அவர்கள் அமைந்துள்ள காஸா மீது தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை 43,500 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலிய பிணைக் கைதிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. அவர்களின் நிலை என்ன என்பது தெரியவரவில்லை.