வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் போரை மறைமுகமாக ஆதரிப்பதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இதன் காரணமாக, இந்தியா மீது கூடுதலாக 25 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது.
இதற்கிடையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை படிப்படியாக நிறுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

ஆனால் இந்த தகவலை இந்திய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில், இன்று வாஷிங்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிரம்ப், இந்தியா மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும் என்று எச்சரித்தார்.
இது தொடர்பாக, டிரம்ப் ஒரு பேட்டியில் கூறியதாவது: “நான் இந்திய பிரதமர் மோடியிடம் பேசினேன். அவர் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கப் போவதில்லை என்று கூறினார்.”