அமெரிக்கா ஈரானின் அணுசக்தி உலைகளை குறிவைத்து நடத்திய தாக்குதல் பற்றி, அதிபர் டொனால்டு டிரம்ப் தனது கடைசி பேட்டியில் விளக்கமளித்தார். கடந்த சில வாரங்களாகவே ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் சூழ்நிலை மேலும் தீவிரமாகிய நிலையில், அமெரிக்கா ‘ஆபரேஷன் மிட்நைட் ஹாமர்’ எனப்படும் ரகசிய தாக்குதலை மேற்கொண்டது. இதில், பர்டோவ், நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய மூன்று முக்கிய அணு உலைகளும் முற்றிலும் சேதமடைந்தன.

தாக்குதலுக்கு முன் ஈரானுக்கு சரண் அடையுமாறு சமாதான கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அதனை அவர்கள் நிராகரித்த பின்னரே இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் டிரம்ப் கூறினார். தாக்குதல் நடத்தும்போது அவர்கள் நுழைவு பகுதிகளை மூட முயற்சித்தனர் என்றாலும், அமெரிக்காவின் Bunker Buster வகை குண்டுகள், வெண்ணெயைப் போல ஊடுருவி சென்று நேரடி தாக்குதலை நிகழ்த்தியதாக அவர் விளக்கியார். இதனால் யுரேனியம் சேதமடைந்து, முழு அணுஅாயுதத் திட்டமே முற்றாக வீழ்ந்துவிட்டதாகக் கூறினார்.
தொடர்ந்து, இந்த தாக்குதலின் போது எந்த ஒரு முன்னறிவிப்பும் வழங்கப்படவில்லை என்றும், ஈரான் விமானங்கள் வருவதை உணர இயலாமல் திகைத்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆரம்பத்தில் தாக்குதல் மிகவும் ஆபத்தானதாக இருந்தது என்றும், ஆனால் முடிவில் எல்லாம் திட்டமிட்டபடி வெற்றிகரமாகச் சென்றதாகவும் டிரம்ப் தெரிவித்தார். இதன் மூலம், ஈரானின் அணு ஆயுத முயற்சி பல ஆண்டுகளுக்குப் பின்தள்ளப்பட்டது என்பது மிக முக்கியமான வெற்றியாகும் என அவர் கூறினார்.
மேலும் கனடாவுடனான வரி குறைப்பு ஒப்பந்தம் தொடர்பாகவும், அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட டிக்டாக் நிறுவனத்தை வாங்கும் குழுவின் பெயர்கள் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த வெளிப்பாடுகள் அனைத்தும், அவரது நிர்வாகத்தின் வரலாற்று முக்கியத்துவத்தையும், எதிர்கால உள்நாட்டுச் சூழ்நிலையையும் வெளிக்கொணர்கின்றன.