சிகாகோ: அமெரிக்காவின் முக்கிய நகரங்களாகும் வாஷிங்டன் மற்றும் லாஸ் ஏஞ்சலஸுக்குப் பிறகு, தற்போது சிகாகோவிலும் பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியாக ராணுவத்தை களமிறக்கும் முடிவை அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்துள்ளார். “நகரம் குற்றச்செயல்களால் குழப்பத்தில் உள்ளது, அதை நாங்கள் சரி செய்வோம்” என அவர் உரையாற்றியதுடன், பென்டகன் நடவடிக்கைக்கு தயார் நிலையில் உள்ளது.

அமெரிக்க தலைநகரான வாஷிங்டன், போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்த போதிலும், டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் பாதுகாப்பை நேரடியாக கட்டுப்படுத்த கடந்த வாரங்களில் ராணுவத்தினரை நேரடியாக களமிறக்கியது. இதற்கான காரணமாக, நகரத்தில் நடந்துவரும் வன்முறை மற்றும் குற்றச் செயல்களின் அதிகரிப்பு காட்டப்பட்டது.
அதே மாதிரியான சூழல் லாஸ் ஏஞ்சலஸ் நகரிலும் கடந்த ஜூன் மாதம் ஏற்பட்டது. குடியேற்ற துறை அதிகாரிகள் புலம்பெயர்ந்தோரை கைது செய்யும் நடவடிக்கையில், அதனை எதிர்த்த பொதுமக்கள் எழுப்பிய எதிர்ப்பின் பின்னணியில், 4,000 ராணுவத்தினர் மற்றும் 700 கடற்படையினர் அங்கு அனுப்பப்பட்டனர்.
தற்போது, சிகாகோ நகரமும் அதேபோல் “பாதுகாப்பு மையமாக” மாறும் சூழ்நிலைக்குள் செல்கிறது. குற்றங்கள், படுகொலை, மற்றும் சமூக அமைதி தொடர்பான சிக்கல்கள் காரணமாக, டிரம்ப் நிர்வாகம் கைகொடுக்கிறது. இதற்கமைய, பென்டகனில் இருந்து சிகாகோவுக்கு ராணுவம் அனுப்ப நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த முடிவு, சிக்கலான அரசியல் மற்றும் சமூக விமர்சனங்களை ஏற்படுத்தும் வாய்ப்பும் உள்ளது. அமெரிக்க மாகாண அரசுகள் மற்றும் நகர நிர்வாகங்கள், நடப்பது குற்றங்களை கட்டுப்படுத்துவதா, அல்லது ஜனநாயக உரிமைகளை ஒடுக்குவதா என்ற கேள்விகளை எழுப்பத் தொடங்கியுள்ளன.