பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆக்கப்பூர்வமான உரையாடலை மேற்கொண்டதாக டொனால்ட் டிரம்ப் நேற்று தெரிவித்தார். இதை தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்த டிரம்ப், “சீன அதிபருடனான தொலைபேசி அழைப்பு சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. பல பிரச்சனைகளை நாம் ஒன்றாகச் சேர்ந்து தீர்த்து உடனடியாகச் செயல்படத் தொடங்குவோம் என்று நம்புகிறேன்.
வர்த்தகம், வலி நிவாரணிகள், டிக்டாக் உள்ளிட்ட பல விஷயங்களை சமநிலைப்படுத்துவது குறித்து நாங்கள் விவாதித்தோம். உலகை மிகவும் அமைதியான மற்றும் பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கு அதிபர் ஜி ஜின்பிங்கும் நானும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்” என்று அவர் எழுதினார். சீன அரசு ஊடகமான சின்ஹுவா, இரு தலைவர்களும் முன்னதாக தொலைபேசியில் பேசியதை உறுதிப்படுத்தினர்.

ஆனால் அது அவர்களின் கலந்துரையாடலின் விவரங்களை வெளியிடவில்லை. ஜனவரி 20-ம் தேதி வாஷிங்டனில் நடைபெறும் டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழாவில் ஜி ஜின்பிங் கலந்து கொள்ள மாட்டார் என்றும், அவருக்குப் பதிலாக துணை அதிபர் ஹான் ஜெங் சிறப்புப் பிரதிநிதியாக கலந்து கொள்வார் என்றும் சீனா அறிவித்துள்ளது.