ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதலைத் தொடராமல் தடுக்க, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது கூடுதல் வரிகளை விதித்ததாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்தார். “உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா மீது ஜனாதிபதி டிரம்ப் அதிக அழுத்தம் கொடுத்துள்ளார். இந்தியா மீதான தடைகள் உட்பட பிற நடவடிக்கைகளையும் அவர் எடுத்துள்ளார்.
இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று அவர் தனக்குள் உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளார். டிரம்ப் விரைவில் அமைதியை ஏற்படுத்த விரும்புகிறார். நேட்டோ பொதுச்செயலாளர் உட்பட அனைத்து ஐரோப்பிய தலைவர்களும் இது ஒரு நல்ல முதல் படி என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். மேலும் ஜெலென்ஸ்கியும் டிரம்பும் பேசப் போவது ஒரு நல்ல விஷயம்.

ஜனாதிபதி அது நடக்க வேண்டும் என்று விரும்புகிறார். இருதரப்பு உறவை வலுப்படுத்த அமெரிக்க அரசாங்கம் ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுடனும் இணைந்து செயல்படுகிறது என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். அமெரிக்க மண்ணில் புதினை டிரம்ப் சந்தித்த 48 மணி நேரத்தில், டிரம்ப் வெள்ளை மாளிகையில் அனைத்து ஐரோப்பிய தலைவர்களையும் சந்தித்தார்.
எனவே டிரம்ப் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டதற்கும், இது குறித்து ரஷ்யாவின் நிலைப்பாட்டை அறிய வாய்ப்பளித்ததற்கும் ஐரோப்பிய தலைவர்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக உள்ளனர். இது முந்தைய நிர்வாகம் செய்யாத ஒன்று,” என்று கரோலின் லீவிட் கூறினார்.