உக்ரைன் – ரஷ்யா இடையே போர் தீவிரமடைந்து, போர் 1000 நாட்களை கடந்துள்ள நிலையில், உக்ரைனில் உள்ள அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ் போன்ற நாடுகளின் தூதரகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
போர் தொடர்ந்த நிலையில், ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா தயாரித்த நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் ஏவியது. இதன் விளைவாக, ரஷ்ய ஜனாதிபதி புடின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதித்தார்.
இதைப் பொருட்படுத்தாமல், ரஷ்யாவைத் தாக்க உக்ரைன் பிரிட்டிஷ் ஏவுகணையைப் பயன்படுத்தியது. இந்தச் சூழல் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.
மேலும், உக்ரைன் தலைநகர் கீவ் மீது எந்த நேரத்திலும் ரஷ்யா வான்வழி தாக்குதலை நடத்தலாம் என அங்குள்ள மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
இதனிடையே, கியேவில் உள்ள அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ் ஆகிய நாடுகளின் தூதரகங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.