ஜோ பைடன் மகன் ஹண்டர் பைடன் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்தமை மற்றும் பொய்யான புகாரளித்த குற்றத்திற்காக அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்குப் பிறகு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மகனுக்கு மன்னிப்பு வழங்குவாரா என்ற கேள்வி எழுந்தது.
கடந்த காலங்களில், ஹண்டர் பிடனின் சிறைத்தண்டனை குறைக்கப்படாது என்று வெள்ளை மாளிகை கூறியது. ஆனால் இப்போது, ஜோ பைடன் தனது மகன் ஹண்டர் பைடனுக்கு மன்னிப்பு வழங்கும் ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “”ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகும், நீதித்துறையில் தலையிட மாட்டேன் என்று கூறியிருந்தேன். என் மகன் சித்ரவதை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போதும் தலையிடவில்லை. அரசியல் பழிவாங்கல் காரணமாக எனது மகனுக்கு அநீதி இழைக்கப்பட்டது. இன்று நான் மன்னிப்பு வழங்குகிறேன்,” என்றார்.