வாஷிங்டன்: ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஜனாதிபதி டிரம்ப் 50 சதவீத வரி விதித்துள்ளார். இது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வரி மோதலை மேலும் சூடுபடுத்தியுள்ளது. அமெரிக்கா விதித்த கூடுதல் வரி துரதிர்ஷ்டவசமானது என்று இந்தியா தெரிவித்துள்ளது.
இந்த சூழ்நிலையில், அமெரிக்காவில் எதிர்க்கட்சியாக இருக்கும் ஜனநாயகக் கட்சியின் எம்.பி., இந்தியா மீது 50 சதவீத வரி விதிப்பதை எதிர்த்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இந்த வரி இந்தியாவும் அமெரிக்காவும் பல ஆண்டுகளாக உருவாக்கி வரும் உறவை ஆபத்தில் ஆழ்த்துகிறது. இந்த கூடுதல் வரிகள் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நீண்டகால உறவை பெரிதும் பாதிக்கும்.
எந்தவொரு பிரச்சினையும் பேச்சுவார்த்தை அல்லது வன்முறையற்ற வழிமுறைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும். ஆனால் கடந்த வாரம் 25 சதவீத வரி விதித்த ஜனாதிபதி டிரம்ப், இந்த வாரம் இந்தியா மீது கூடுதலாக 25 சதவீத வரி விதித்துள்ளார். இந்த வரிகள் மிக அதிகம். இது சரியல்ல. இவ்வாறு அவர் கூறினார்.