விசா கட்டுப்பாடுகளை தளர்த்துவதுடன், இந்தியாவுக்கான சீன தூதர் ஹு ஃபெய்ஹாங் இந்த நடவடிக்கையை வரவேற்று, “அதிக இந்திய நண்பர்களை சீனாவுக்கு வரவேற்கிறோம். பாதுகாப்பான, வெளிப்படையான, நேர்மையான, துடிப்பான மற்றும் நட்புறவான சீனாவை அனுபவியுங்கள்” என்றார். சீனா அமெரிக்காவின் முக்கிய வர்த்தக பங்காளியாக உள்ளது.
அதுமட்டுமின்றி பொருளாதாரப் போட்டியாளராகவும் உள்ளது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், பரஸ்பர கட்டணங்களை அறிவித்தார். இதற்கு பதிலளித்த சீனா மற்ற நாடுகளுக்கு வரிகளை விதிக்க சலுகைகளை அறிவித்தது மற்றும் 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது, அதே நேரத்தில் டிரம்ப் சீனா மீது மட்டும் 145% வரியை விதித்தார். ஆனால், சற்றும் சளைக்காத சீனா, அமெரிக்காவுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறது.

மேலும், வளரும் நாடுகளுக்கு எதிரான அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைகளை கூட்டாக எதிர்கொள்ள வேண்டும் என்று சீனா சமீபத்தில் இந்தியாவை வலியுறுத்தியது. இந்நிலையில், இந்தியாவுடனான நட்புறவை ஏற்படுத்துவதற்காக இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்கள் குறித்த புள்ளி விவரத்தை இந்தியாவுக்கான சீன தூதர் வெளியிட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவின் கடுமையான வரி விதிப்பு நடவடிக்கைகளால் சீனா தனது பொருட்களுக்கான சந்தையாக இந்தியாவை அதிகம் சார்ந்து இருக்கக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களைப் பாதிக்கும் என்றும் அவர்கள் கணித்துள்ளனர். இந்நிலையில், இந்தியாவுடன் நட்புறவை அதிகரிக்க சீனா தயாராக இருப்பது பல்வேறு வாதங்களுக்கு வழிவகுத்தது. இந்திய பயணிகள் தங்கள் விசா விண்ணப்பங்களை நேரடியாக விசா மையங்களுக்குச் சென்று சமர்ப்பிக்கலாம். முன்னதாக, ஆன்லைனில் விண்ணப்பித்து அனுமதி பெற்ற பின்னரே தூதரகத்தில் விசா விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் முறை இருந்தது.
குறுகிய காலத்திற்கு மட்டுமே சீனாவுக்குச் செல்ல விரும்பும் இந்தியர்கள் தங்கள் பயோமெட்ரிக் தகவல்களை வழங்கத் தேவையில்லை. இந்தியர்கள் சீன விசா பெறுவதற்கான கட்டணம் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. விசா விண்ணப்பங்கள் முன்னெப்போதையும் விட வேகமாகச் செயல்படுத்தப்படுகின்றன. சீன கலாச்சாரம், பண்டிகைகள் மற்றும் சுற்றுலா தலங்களை முன்னிலைப்படுத்தி, இந்தியர்களுக்கு தனது விருந்தோம்பலை சீனா அதிகரித்துள்ளது.