கீவ்: நிலப்பரப்பிலும் மக்கள் தொகையிலும் தமிழ்நாட்டை விட சிறிய அளவில் உள்ள உக்ரைன், உலகின் ராணுவ சக்தியிலேயே முதன்மையான ரஷ்யாவை வாட்டி வதைக்கின்றது. இதன் காரணம் என்ன? எவ்வாறு இது சாத்தியமானது? எனும் கேள்விகளுக்குப் பதிலாக இந்த செய்தி தொகுப்பு முக்கியமான விடயங்களை விளக்குகிறது.

2022ம் ஆண்டு தொடங்கிய ரஷ்யா–உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆரம்பம் முதல் இன்றுவரை உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வழங்கிய மொத்த நிதி உதவி 430 பில்லியன் அமெரிக்க டாலராகும். இதில் மட்டும் அமெரிக்கா வழங்கிய தொகை 128 பில்லியன் டாலர். அதில் 71 பில்லியன் ராணுவ உதவிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியனும் 124 பில்லியன் டாலருக்கு உதவியை வழங்கியுள்ளது.
இந்தியாவைப் பார்த்தால், 110 கோடி மக்கள் தொகை கொண்ட நமது நாடு ஆண்டு ராணுவத்திற்கு 78.57 பில்லியன் டாலரே ஒதுக்கி வருகிறது. ஆனால் உக்ரைனுக்கான வெளிநாட்டு உதவி இதைவிட பலமடங்கு அதிகம். இதுவே உக்ரைனுக்கு தொழில்நுட்ப ரீதியாக முன்னோடி ஆயுதங்களை வழங்க வழிவகுத்துள்ளது.
உக்ரைன் கையாண்ட முக்கிய ஆயுதங்களில் FPV ட்ரோன்கள் முக்கியமானவை. இவை சமீபத்தில் 4000 கிமீ தூரத்தில் உள்ள ரஷ்ய விமான தளங்களை சென்று தாக்கி அழித்துள்ளன. இது உக்ரைன் தயாரிப்பு ட்ரோனாக இருந்தாலும், அதனைத் தவிர மற்ற பல முன்னேற்றமிக்க ஆயுதங்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளால் வழங்கப்பட்டவை.
அமெரிக்காவின் ATACMS ஏவுகணைகள் 300 கிமீ தூர இலக்குகளை தாக்கும் திறனுடையவை. ரேடாரில் மறைந்து செல்வதும், துல்லியமான தாக்குதல்களும் இதன் சிறப்பம்சம். Storm Shadow மற்றும் Scalp ஏவுகணைகள் பிரிட்டனும் பிரான்ஸும் இணைந்து தயாரித்தவை. 250 கிமீ தூர இலக்குகளையும் தாக்கவல்ல இந்த ஏவுகணைகள் விமான தளங்களை அழிக்கப் பயன்படுகின்றன.
ஜெர்மனியால் வழங்கப்பட்ட Leopard 2 டாங்குகள் உலகத்தில் மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படுகின்றன. வேகமான இயக்கம், உயர் பாதுகாப்பு மற்றும் துல்லியமான தாக்குதல் ஆகியவையும் இதில் அடங்கும். மேலும், உலகம் அறிந்த F-16 போர் விமானங்கள் அமெரிக்காவின் தயாரிப்பாகும். இது ரஷ்ய ஏவுகணைகள் மற்றும் விமானங்களை அழிக்க பயன்படுகின்றது.
இத்தனை எல்லை கடந்த தொழில்நுட்ப ஆதரவுகள் மற்றும் நிதி உதவிகள் தான் உக்ரைனுக்கு ரஷ்யாவை எதிர்த்துப் போராடும் மன உறுதி மற்றும் திறனை அளித்துள்ளன. இந்த நவீன ஆயுதங்களே இன்று ரஷ்யா தடுமாறும் நிலைக்கு செல்வதற்குக் காரணமாகி உள்ளன.
உண்மையில், உக்ரைனின் வெற்றியின் பின்னால் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் மற்றும் அவர்களது தொழில்நுட்ப உதவிகளின் பங்களிப்பு பெரிதும் உள்ளது. சிறிய தேசமென்றாலும், சரியான உதவியுடன் எப்படி பெரும் சக்தியை எதிர்த்து நிற்க முடியும் என்பதற்கான உயிர் வாழும் உதாரணமே உக்ரைன்.