வாஷிங்டன்: உலக வங்கியின் அறிக்கையின்படி, அமெரிக்காவின் தனிநபர் வருமானத்தில் நான்கில் ஒரு பங்கை அடைய இந்தியா சுமார் 75 ஆண்டுகள் ஆகலாம். பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா உட்பட 100 க்கும் மேற்பட்ட நாடுகள் உயர் வருமான நிலையை அடைவதில் தடைகளை எதிர்கொள்கின்றன.
இதுகுறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அடுத்த பத்தாண்டுகளில் இந்தியா உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் அதிக வருமானம் ஈட்டும் நபர்களைக் கொண்ட நாடுகளாக மாறுவதற்கு கடுமையான தடைகளை சந்திக்க நேரிடும்.
அமெரிக்காவின் தனிநபர் வருமானத்தில் கால் பங்கை எட்ட இந்தியாவுக்கு 75 ஆண்டுகள் ஆகலாம். அதேசமயம், சீனாவுக்கு 10 ஆண்டுகளும், இந்தோனேசியாவுக்கு 70 ஆண்டுகளும் ஆகும்.
ஒவ்வொரு நாடும் தங்கள் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு விரைவாகச் செயல்பட்டாலும், 34 நடுத்தர வருமானப் பொருளாதாரங்கள் மட்டுமே அதிக வருமானம் பெறும் நிலைக்கு மாற முடிந்தது. இவ்வாறு அதில் கூறுகிறது.