போப் பிரான்சிஸின் மரணம், நூற்றாண்டுகள் பழமையான ஒரு மர்ம தீர்க்கதரிசனத்தை மீண்டும் பேசப்பட வைத்துள்ளது. ‘போப்புகளின் தீர்க்கதரிசனம்’ என அழைக்கப்படும் இந்த கையெழுத்து, 12ஆம் நூற்றாண்டில் புனித மாலச்சியா என்ற குருவால் எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது. இது 1143 ஆம் ஆண்டு ஆட்சி செய்த இரண்டாம் செலஸ்தீனோவைத் தொடங்கி, கடைசி போப்பாகக் கூறப்படும் “ரோமானியன் பேதுரு” வரையிலான 112 போப்புகள் பற்றி புதிரான லத்தீன் சொற்றொடர்களை கொண்டுள்ளது.

இந்த தீர்க்கதரிசனத்தின் முக்கியமான பகுதி, கடைசி போப்பின் ஆட்சியில் ரோம் நகரம் அழிக்கப்படும் என்றும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை நிகழும் என்றும் கூறுகிறது. போப் பிரான்சிஸ் கடந்த வாரம் 88வது வயதில் மூளை இரத்தப்போக்கால் காலமானது, இந்த தீர்க்கதரிசனத்தின் கடைசி பகுதியை நினைவுப்படுத்தியுள்ளது. விசுவாசிகள் இதனை 2027 ஆம் ஆண்டில் நடக்கும் “நியாயத்தீர்ப்பு நாள்” என நம்புகிறார்கள்.
போப்புகளின் பட்டியலில் அடுத்து வரவிருக்கும் பெயர் குறித்து பலர் ஆர்வமாக உள்ளனர். இப்போது வாய்ப்பு பெற்றுள்ள ஒன்பது கார்டினல்களில் மூவர் ‘பீட்டர்’ அல்லது ‘பியட்ரோ’ என்ற பெயர்களை கொண்டுள்ளனர். இது, “ரோமானியன் பேதுரு” பற்றிய தீர்க்கதரிசனத்துடன் தொடர்புள்ளதாக கருதப்படுகிறது. இதில் ஹங்கேரியின் பீட்டர் எர்டோ, கானாவின் பீட்டர் டர்க்சன் மற்றும் இத்தாலியின் பியட்ரோ பரோலின் உள்ளனர்.
திருச்சபை தற்போது பாரம்பரிய ஒன்பது நாள் துக்கத்துக்காக தயாராகி வருகின்றது. அதனைத் தொடர்ந்து, 80 வயதிற்குள் உள்ள கார்டினல்கள் ரோமில் ஒன்று கூடி, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று புதிய போப்பை தேர்ந்தெடுப்பார்கள்.
தீர்க்கதரிசனத்தின் கடைசி வரிகள் சற்று பயமுறுத்தும் விதமாக உள்ளன. “புனித ரோமானிய திருச்சபையின் இறுதி துன்புறுத்தலில் ரோமானியன் பேதுரு ஆட்சி செய்வார்… பின்னர் ஏழு மலைகள் கொண்ட நகரம் அழிக்கப்படும், பயங்கரமான நீதிபதி மக்களை நியாயந்தீர்ப்பார்.”
இந்த ஆவணத்தின் உண்மைத் தன்மையை சிலர் கேள்விப்படுத்தினாலும், அதில் கூறப்பட்ட பல வரிகள் சமீபத்திய போப்புகளுடன் அதிர்ச்சிகர ஒத்துப்போகின்றன. “ஒலிவையின் மகிமை” என்ற வரி, ஒலிவெட்டன் மத ஒழுங்கைச் சேர்ந்த போப் பெனடிக்ட் XVI உடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. “சூரிய கிரகணத்தின்” வரி, சூரிய கிரகணத்தில் பிறந்த போப் ஜான் பால் II-ஐக் குறிக்கிறது.
இது போல, தீர்க்கதரிசனத்தின் நடுப்பகுதி 1585 ஆம் ஆண்டு என்று கணிக்கப்பட்டால், கடைசி போப்பான “ரோமானியன் பேதுரு” 2027 ஆம் ஆண்டு வரலாம் என்பதே பலரின் நம்பிக்கை. இது போப்பாண்டவர்களின் வரிசையில் 442 ஆண்டுகள் இடைவெளியுடன் நிகழும் முக்கிய தருணமாகும்.
போப்பின் மரணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தீர்க்கதரிசனங்கள், உலகம் ஒரு திருப்புமுனையை நோக்கி செல்லும் முன்சைக்களா என்பதற்கான விவாதங்களை உயிர்ப்பிக்கின்றன. இதற்கான பதில், நம்பிக்கைக்கும் நேரத்தின் ஓட்டத்திற்கும் மட்டுமே தெரியும்.