By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    பிபா உலகக்கோப்பை கால்பந்து… பள்ளிகளுக்கு 40 நாட்கள் முன்கூட்டியே விடுமுறை!
    1 Min Read
    ஈரானுக்கு எதிராக அமெரிக்கா எடுத்த நடவடிக்கை – 61 கப்பல்களை திருப்பி அனுப்பியது!
    1 Min Read
    9 ஆண்டுகளுக்குப் பின்னர் சீனா செல்லும அமெரிக்க அதிபர் டிரம்ப்!
    1 Min Read
    பாதுகாப்பு காரணங்களால் புதின் எடுத்த அதிரடி முடிவு
    1 Min Read
    ‘அவதார்’ படத்திற்கு எதிராக நடிகை கொரியன்கா கில்ச்சர் வழக்கு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    எஸ்.பி.ஐ. வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் 4 நாட்கள் சேவை முடங்கும் அபாயம்
    1 Min Read
    நீட் வினாத்தாள் கசிவு புகார்… தேர்வை ரத்து செய்தது தேசிய தேர்வு முகமை
    1 Min Read
    பெட்ரோல் விலையை கட்டுக்குள் இந்தியா வைத்திருப்பது எப்படி?
    1 Min Read
    தீப்புண்ணை ஆற்றும் குணம் கொண்டது பீட்ரூட்
    1 Min Read
    நீண்ட நேரம் தொடர்ச்சியாக ‘இயர்போன்’ பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தஞ்சாவூரில் உலக செவிலியர் தின கொண்டாட்டம்
    1 Min Read
    தீபம் ஏற்றுவதால் இவ்வளவு நன்மையா?
    1 Min Read
    சென்னை – போத்தனூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமாம்
    1 Min Read
    துளசி செடியை வழிபடுவது எப்படி? தெரிந்து கொள்வோம்
    1 Min Read
    வெள்ளிக்கிழமைகளில் இந்த விஷயங்களை செய்யாதீர்கள்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: மீனாட்சி மருத்துவமனையி நடத்திய ஒற்றுமையை ஊக்குவிக்கும் இப்தார்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > மீனாட்சி மருத்துவமனையி நடத்திய ஒற்றுமையை ஊக்குவிக்கும் இப்தார்
தமிழகம்

மீனாட்சி மருத்துவமனையி நடத்திய ஒற்றுமையை ஊக்குவிக்கும் இப்தார்

Nagaraj
Last updated: March 12, 2026 9:36 am
By Nagaraj 2 Min Read
Share
SHARE

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் மீனாட்சி மருத்துவமனை நடத்திய மாபெரும் இஃப்தார் கொண்டாட்டம் நடந்தது. இந்த இப்தார் நிகழ்ச்சியில் சமூக நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் ஊக்குவிக்கும் நிகழ்வில் 2000 – க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வின்போது, சமுதாயத்தின் மீது கொண்டுள்ள அக்கறை மற்றும் பொறுப்புறுதியின் ஒரு வெளிப்பாடாக தள்ளுபடி செய்த கட்டணங்களில் உடல்நல பராமரிப்பு சேவைகளைப் பெற உதவுவதற்காக கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு உடல்நல பராமரிப்பு அட்டைகளை மருத்துவமனை வழங்கியது. 

சமூக நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் ஊக்குவித்து கொண்டாடும் விதத்தில் ஒரு சிறப்பான இஃப்தார் விருந்தை மீனாட்சி மருத்துவமனை ஏற்பாடு செய்து நடத்தியது.  இதில் பல்வேறு பின்புலங்களைச் சேர்ந்த 2000 – க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.  இஸ்லாமியர்களுக்கு புனித மாதமான ரமலான் நோன்பின்போது பல்வேறு சமயங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் ஊக்குவிப்பதே இந்நிகழ்வின் நோக்கமாகும்.  

இஃப்தார் விருந்தின்போது, பாரம்பரியமான பரிமாறப்படும் உணவுகள் இந்நிகழ்வில் இடம்பெற்றது.  ரமலான் நோன்பு காலத்தின்போது ஆரோக்கியமாக உணவு உண்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ஊட்டச்சத்துள்ள உணவுகள் பற்றிய ஆலோசனைக் குறிப்புகளையும் மீனாட்சி மருத்துவமனை இந்நிகழ்வில் வழங்கியது.  

இஃப்தார் விருந்து நிகழ்வில் தலைமை விருந்தினராக மகாராஜா சில்க்ஸ்  & மஹால் நிறுவனத்தின் உரிமையாளர் திரு. முகமது ரஃபி கலந்துகொண்டு சிறப்பித்தார்.  இந்திய இவான்ஜெலிக்கல் லுத்தரன் ஆலயத்தின் பாஸ்டர் ஜேக்கப் ஜெயராஜ் உட்பட, கிறிஸ்தவ மற்றும் இந்து சமயத்தைச் சேர்ந்த முக்கியமான தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டது சமய ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தது.  

இதில் மீனாட்சி மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அதிகாரி மணிவாசகம் வரவேற்புரையாற்றினார். சிறப்புரை வழங்கிய ஓய்வு துணை காவல் கண்காளிப்பாளர் மாணிக்கவாசகம் ஒற்றுமையின் முக்கியத்துவம் குறித்த செய்தியை வலியுறுத்தினார்.  ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான அல்மாஸ் அலி மற்றும் மீரா பஸ் உரிமையாளர் சர்ஃபுதீன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மீனாட்சி மருத்துவமனையின் செயல்பாட்டுத் துறை மற்றும் மார்க்கெட்டிங் பொது மேலாளர் சிவக்குமார் சிறப்புரையாற்றி இஃப்தார் விருந்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் சிறப்பு சலுகையை வழங்கும் பிரிவிலேஜ் அட்டைகளை வினியோகித்தார்.  அகத் தணிக்கை துறையைச் சேர்ந்த  ஹாஜா நஜிமுதீன், மருத்துவமனையின் அழைப்பை ஏற்று பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரையாற்றினார். 

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையின் தலைவர் டாக்டர். எஸ். குருசங்கர் கலந்து கொண்டு அவரது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.  “இதுபோன்ற நிகழ்வுகளே ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் கனிவான கருணையின் சக்தியை நமக்கெல்லாம் வலுவாக நினைவூட்டுகின்றன.  ரமலான் நோன்பின் உணர்வை  கொண்டாடுவதற்கு அனைத்து சமுதாய மக்களையும் ஓரிடத்தில் ஒருங்கிணைத்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறோம்.  உடல்நல சிகிச்சை என்பதையும் கடந்து, பிணைப்புகளை மேலும் வலுவாக்குவதிலும் கருணையின் உண்மையான மதிப்பீடுகளை செயல்பாட்டில் பிரதிபலிக்கவும் ஒருவர் மற்றொருவருக்கு ஆதரவாக இருப்பதன் முக்கியத்துவத்தை  உணர்த்துவதிலும் நாங்கள் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பை இந்நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது என்று தெரிவித்தார்.

ஒத்திசைவும் நெருக்கமான நல்லுறவும் கொண்ட ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதில் இம்மருத்துவமனை கொண்டிருக்கும் அர்ப்பணிப்பையும், அக்கறையையும் வலியுறுத்தும் விதத்தில் 2000-க்கும் அதிகமான பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

You Might Also Like

தஞ்சாவூரில் உலக செவிலியர் தின கொண்டாட்டம்

தீபம் ஏற்றுவதால் இவ்வளவு நன்மையா?

சென்னை – போத்தனூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமாம்

துளசி செடியை வழிபடுவது எப்படி? தெரிந்து கொள்வோம்

வெள்ளிக்கிழமைகளில் இந்த விஷயங்களை செய்யாதீர்கள்

TAGGED:2000 பேர் பங்கேற்புஅர்ப்பணிப்புஇப்தார் விருந்துஒற்றுமைதஞ்சாவூர்மீனாட்சி மருத்துமனை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

தஞ்சாவூரில் உலக செவிலியர் தின கொண்டாட்டம்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?