பிரான்ஸ்: பிரான்ஸ் ஜி7 உச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உலகத் தலைவர்களுடன் முக்கிய ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளார்.
பிரான்சின் எவியன் நகரில் ஜி7 உச்சி மாநாட்டில் உலகின் முக்கிய நாடுகளின் தலைவர்கள் ஒன்று கூடியுள்ளனர். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, பிரேசில் அதிபர் லுலா டா சில்வா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டுள்ளனர்.
சர்வதேச ஒத்துழைப்பு, செயற்கை நுண்ணறிவு, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட அம்சங்கள் இந்த மாநாட்டின் முக்கிய விவாத பொருள்களாக உள்ளன.