சீனா: சீனாவின் வடமேற்கு பகுதியில் நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், நான்கு பேர் காயமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சீனாவின் ஹைக்சி மங்கோலியன் மாகாணத்தில் இன்று மாலை 5.06 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் தரையிலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக சீன நிலநடுக்கம் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பேரிடர் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது. பாதுகாப்பு நடவடிக்கையாக அருகிலிருந்த நிலக்கரி சுரங்கங்களில் பணிபுரிந்த தொழிலாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த பேரிடரில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். மேலும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.