தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இன்று (ஜூன் 19) பலத்த மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரளப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் தேவையற்ற வெளிப்பயணங்களை தவிர்க்கவும், தாழ்வான பகுதிகளில் வசிப்போர் முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.