தமிழக அரசில் பல முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அரசாணையை தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ளார். டி. பிரபு சங்கர் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். வி.பி. ஜெயசீலன் சுற்றுலாத்துறை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர்கள் பரஸ்பரம் மாற்றப்பட்டுள்ளனர். இன்னசென்ட் திவ்யா கோ-ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். டி. மோகன் மாநகர போக்குவரத்து கழக எம்.டி.யாக பொறுப்பேற்கிறார். ஸ்ரேயா பி. சிங் சென்னை மாநகராட்சியில் புதிய பொறுப்பு பெற்றுள்ளார்.
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்
Leave a comment